Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்கள் கொடுத்து….. 5 விக்கெட் எடுத்ததுமட்டுமில்லாமல்…. பல சாதனைகளை படைத்த புவி…. இதோ லிஸ்ட்.!!

ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.. மேலும் கேப்டன் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்..

இதையடுத்து 213 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.. இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் புவனேஸ்வர் குமார் வீசிய  3ஆவது ஓவரில் கரீம் ஜனத் 2, நஜிபுல்லா ஸத்ரான் 0 ரன்களில் இருவரும்  ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் 3 ஓவரில் 9/4 மட்டுமே எடுத்து தத்தளித்தது..  அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 6ஆவது ஓவரில் முகமது நபியும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின் மீண்டும் புவனேஸ்வர் குமாரின் அடுத்த ஓவரில் அஸ்மத்துல்லா உமர்சாய் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின் வந்த ரஷீத் கான் 15, முஜீப் உர் ரகுமான் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இப்ராகிம் சத்ரான் மட்டும் முடிந்தவரை ஆடி 64 (59) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. பரீத் அகமது 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 1 எக்கனாமியில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.. முன்னதாக நடந்த சூப்பர்4 சுற்றில் 19 ஆவது ஓவரில் எதிரணிகளுக்கு (பாகிஸ்தான், இலங்கை) 25 மற்றும் 19 ரன்கள் தேவைப்பட்டபோது, 19 மற்றும் 14 என ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார் புவனேஸ்வர் குமார்.. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த புவனேஷ்வர் குமார் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிரட்டல் பந்துவீச்சால் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியதன் மூலம் 7 சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார்..

1. டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்த ரன்களை கொடுத்து அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்துவீச்சாளர் என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர் குல் சாதனையை தகர்த்தெறிந்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

1. புவனேஸ்வர் குமார் : 2022ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக (4 ரன்கள்)

2. உமர் குல் : 2009ல் நியூசிலாந்துக்கு எதிராக (6 ரன்கள்)

3. உமர் குல் : 2013ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (6 ரன்கள்)

4. லசித் மலிங்கா : 2019ல் நியூசிலாந்துக்கு எதிராக (6 ரன்கள்)

5. தீபக் சாஹர் : 2019ல் வங்கதேசத்துக்கு எதிராக (7 ரன்கள்)

2. சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் எதிரணியின் 2 தொடக்க ஆட்டக்காரர்களையும் டக் அவுட் செய்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.. அதேபோல டி20 கிரிக்கெட்டில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலராகவும் புவனேஸ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.

3. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முழுமையாக 4 ஓவர்களை வீசி குறைந்த ரன்களை கொடுத்த இந்திய பவுலர் அஸ்வினின் சாதனை உடைத்துள்ளார் புவனேஸ்வர் குமார்.

புவனேஸ்வர் குமார் : 4 ரன்கள் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2022)

ரவிச்சந்திரன் அஸ்வின் : 5 ரன்கள் (இலங்கைக்கு எதிராக 2016)

4. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்..

புவனேஸ்வர் குமார் : 31  விக்கெட் (2022 ஆம் ஆண்டு)

ஜஸ்பிரீட் பும்ரா : 28 விக்கெட்  (2016 ஆண்டு)

5. அதேபோல டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு காலண்டர் வருடத்தில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் : 15 விக்கெட் (2022 ஆம் ஆண்டு)

ஆசிஷ் நெக்ரா : 13 விக்கெட் (2016 ஆம்  ஆண்டு)

6.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த சஹால் சாதனையை முறியடித்துள்ளார்.

1.புவனேஸ்வர் குமார் – 84

2.யூசுவேந்திர சஹால் -83

3.ஜஸ்பிரிட் பும்ரா – 69

4.ரிசல்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் -66

5.ஹர்திக் பாண்டியா – 54

7.  டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் அதிக விக்கெட் எடுத்த டிம் சவுதியின் சாதனையை தகர்த்தார் புவி..

1. புவனேஸ்வர் குமார் – 43

2. டிம் சவுதி : 41

3. சாமுவேல் பத்ரீ : 35

 

 

Categories

Tech |