ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி மட்டுமே தற்போது அரையிறுதிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் களமிறங்கினர். இதில் கிரீன் 3 ரன்களில் அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் வாரனர் அதிரடியாக 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் அதிரடியாக 30 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன் பின் வந்த ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னில் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணி 10.4 ஓவரில் 86/4 என சற்று தடுமாறியது. அதன்பின் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் – மேக்ஸ்வெல் இருவரும் கைகோர்த்து ஆடினர். தொடர்ந்து ஸ்டோய்னிஸ் 25 ரன்னில் 16ஆவது ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இருப்பினும் மேக்ஸ்வெல் அதிரடியாக 32 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 54 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை விட்டதால் 15 முதல் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தது.
இதையடுத்துஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் உஸ்மான் கானி இருவரும் களமிறங்கினர். இதில் உஸ்மான் கானி 2 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் குர்பாஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) 30 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அவுட் ஆனார். இதையடுத்து இப்ராஹிம் சத்ரான் குல்பாடின் நைப் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.
இதையடுத்து 14வது ஓவரில் அடுத்தடுத்து ஆப்கான் விக்கெட்டை பறிகொடுத்தது. சாம்பா வீசிய 14ஆவது ஓவரின் முதல் பந்தில் குல்பாடின் நைப் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து அதே ஓவரில் இப்ராஹிம் சத்ரான் 26, நஜிபுல்லா சத்ரன் 0 என சாம்பாவிடம் வீழ்ந்தனர். பின் 15ஆவது ஓவரில் முகமது நபி 1 ரன்னில் வெளியேறினார். இதனால் 14.3 ஓவரில் 103/6 ரன்கள் எடுத்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். அதன் பின் ரஷீத் கான் மற்றும் தர்வீஷ் ரசூலி இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர்.. கடைசியில் 18 பந்துகளில் 49 ரன்கள் ஆப்கானிஸ்தானுக்கு தேவைப்பட்டது.
ரிச்சர்ட்சன் வீசிய 18வது ஓவரில் ரஷித் கான் 2 சிக்சர் அடித்து மிரட்டினார். அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதை அடுத்து 12 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹேசில்வுட் வீசிய 19ஆவது ஓவரில் ரஷித் கான் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என அடிக்க 11 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் கடைசி 6 பந்தில் 22 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஸ்டோய்னிஸ் முதல் பந்தை ஒயிடாக வீச, ஸ்ட்ரைக்கில் நின்ற ரசூலியும், ரசித்தும் ஓடும் போது ரசூலி (15) ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து முதல் பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான் ரன் எடுக்கவில்லை. பின் இரண்டாவது பந்தை ரஷீத் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் ரன் கிடைக்கவில்லை. நான்காவது பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார் கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.. ரஷீத் கான் பேட்டை வீச பந்து நேராக உயரத்திற்கு சென்று யாரும் இல்லாத இடத்தில் விழ 2 ரன்கள் கிடைத்தது. இறுதியில் கடைசி ஒரு பந்தில் பவுண்டரி அடித்தார் ரஷீத்.. இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 164 ரன்கள் எடுத்தது.
ரசீத் கான் அதிரடியாக 23 பந்துகளில் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) 48 ரன்கள் எடுத்த போதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் போராடி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் மற்றும் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும், ரிச்சர்ட்சன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், நெட் ரன்ரேட்டில் மிக குறைவாக இருக்கிறது. தற்போது அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு இலங்கையின் கையில் மட்டுமே உள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி மோதுகிறது. அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை தான். எனவே அவர்கள் இலங்கையை வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டுள்ளனர்.. தற்போது -0.173 ரன்ரேட்டில் ஆஸ்திரேலியா உள்ள நிலையில், இங்கிலாந்து +0.547 ரன்ரேட்டில் உள்ளது. எனவே அரையிறுதிக்கு இங்கிலாந்து செல்லுமா? அல்லது ஆஸ்திரேலியா செல்லுமா? என்பது நாளை தெரிந்து விடும்.. நாளை இலங்கை – இங்கிலாந்து இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது..
A narrow win for Australia keeps their net run rate in the negative! 👀
If England beat Sri Lanka tomorrow, the hosts would miss a semi-final spot 😯#T20WorldCup 2022 Standings 👉 https://t.co/cjmWWRz68E#AUSvAFG pic.twitter.com/qCPzYznAz9
— ICC (@ICC) November 4, 2022