கடலூரில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வீடுகள் ஆகியவற்றை கட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் படி விருதாச்சலம் வருவாய்த்துறையினர் கடலூர் ரோடு இந்திரா நகரில் இருக்கும் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய 95 கடைகளை அகற்றுவதற்கு அளவீடு செய்தனர். இந்நிலையில் 4-வது கட்டமாக கடலூர் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தாசில்தார் கணபதி முன்னிலையில் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் சாலையில் நேற்று போக்குவரத்து இயக்காமல் மாற்ற பாதையில் இயக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாசில்தாரை சந்தித்து தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.