Categories
தேசிய செய்திகள்

4-வது நாளாக இன்றும்….. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை…..!!!!

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.08 லட்சம் கன அடியாக இருப்பதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்

Categories

Tech |