சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கொள்ளை ரித்திகா சிங். இவர் சமூக வலைத்தளத்தில் 44,000 பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்குவார். இந்தநிலையில் ரித்திகா 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்த பின் முகநூல் மூலமாக அறிமுகமான பிரோசாபாத் சேர்ந்த விபூல் அகர்வால் என்ற நபருடன் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் அராவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆகாஷ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் வெள்ளிக்கிழமை ரித்திகா பிளாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ரித்திகாவை தாக்க ஆரம்பித்தனர். விபுலை அவர்கள் குளியல் அறையில் வைத்து பூட்டினர். அதன் பின் கைகளை கயிற்றால் கட்டி அவரை பால்கனியில் இருந்து தூக்கி வீசி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரித்திகா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர். இதனைப் பார்த்த இரண்டு ஆண்கள் ஓடிவிட்டனர். அதன்பின் ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் ரித்திகா சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.