Categories
மாவட்ட செய்திகள்

“4-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு”…. கரையோர கிராமங்களை சூழ்ந்த நீர்….!!!!!

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதையடுத்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீரானது திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணையை வந்தடைந்து அங்கிருந்து கல்லணைக்கு திறந்து விடப்படுகின்றது. பின் கல்லணையிலிருந்து காவிரி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகின்றது.

கொள்ளிடம் ஆற்றில் சென்ற சில நாட்களாக தண்ணீரின் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களை நீர் சூழ்ந்து இருக்கின்றது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நீர் சூழ்ந்திருக்கும் குடியிருப்புகளை பார்வையிட்டார்கள். பின் கிராமத்தில் இருக்கும் முகாமில் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கொள்ளிடத்தில் நீர்வரத்து நான்காவது முறையாக அதிகரித்திருப்பதால் கிராமத்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

Categories

Tech |