Categories
பல்சுவை

4 வயதில் Bike Racing-ஆ…..  சாதித்த காட்டிய சிறுவன்….. சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இதுவே உதாரணம்….!!!

சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பது இந்த சம்பவத்தில் உறுதியாகியுள்ளது. நான்கு வயதான ஒரு சிறுவன் பைக் ரேஸில் சாதனை படைத்துள்ளான் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்த உலகின் மிகவும் பிரபலமான பைக் ரேசர் யார் என்று கேட்டால் நிச்சயமாக நாம் கூறுவது வாலண்டினா ரோஸி. அவரைப்போலவே ஒரு நான்கு வயதான சிறுவன் பைக் ரேசிங் செய்து சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவனின் பெயர் டீமா கூலிசாவ். தனது இரண்டு வயதில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆரம்பித்த அந்த சிறுவன் அதன் மீது அதீத ஆர்வம் கொண்டு சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அவனது கவனம் பைக் ரேசிங் மீது திரும்பியது. இதனால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவர்களின் சொந்த ஊரான உக்ரைனில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்துள்ளனர். இதில் பெரும்பாலான போட்டிகளில் அவர் வெற்றி பெற்றதையடுத்த ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய பைக் ரேசிங் போட்டியில் கலந்துகொண்டு அதிலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரது பெற்றோர்கள் அந்த சிறுவனை பைக் ரேசிங்கில் மிகப் பெரிய ஆளாக கொண்டுவரவேண்டும் என்று பல போட்டிகளில் கலந்துகொள்ள வைத்துள்ளனர். தற்போது வரை அந்த சிறுவனின் கனவை தங்களது இலட்சியமாகக் கொண்டு அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.

Categories

Tech |