Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. காவலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக காவலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிவா என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 4 வயது குழந்தையை அறைக்கு தூக்கி சென்று சிவா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சிவாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |