டெல்லியில் தன் மகளை கடத்திச் செல்ல முயன்ற கடத்தல்காரர்களிடமிருந்து தன் மகளை தாயே போராடி மீட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
டெல்லியின் கிழக்கு பகுதியில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் தலைக்கவசம் அணிந்து வந்திருக்கின்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்டனர்.அவர் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவருடைய நான்கு வயது மகளை அந்த நபர்கள் இருவரும் தூக்கிக் கொண்டு வண்டியில் செல்ல முயற்சி செய்தார்கள். உடனே வெளியில் வந்த அச்சிறுமியின் தாய் ஓடிச்சென்று கடத்தல்காரர்களை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு மகளை பாதுகாப்பாக மீட்டார். பின்னர் வாகனம் கீழே விழுந்த நிலையில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். சிறுமியின் தாய் வாகனத்தை இறுக பிடித்து கொண்ட நிலையில் மற்றொரு நபரால் அங்கிருந்து செல்ல இயலவில்லை. அந்நிலையில் வாகனத்தை வேகமாக இயக்கி தப்பித்து செல்ல முயற்சி செய்தார்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு பிடிக்க முயற்சி செய்தபோது அவர் ஓடினர். பின்னர் தப்பித்துச் சென்ற மற்றொரு நபரையும் பிடிக்க முயற்சி செய்த நிலையில் அவர் தப்பித்து ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்தை கைப்பற்றினர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வாகனத்தின் எண்ணை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடித்தனர். அவர்கள் விட்டுச் சென்ற வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் மாமா 30 லட்சம் பணத்திற்காக சிறுமியை கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்கு கடத்தல்காரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
पड़ोसियों ने पकड़ने की खूब कोशिश की https://t.co/SNF1nYLXgZ pic.twitter.com/DX8GlZI0UC
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 22, 2020