Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு 7, 9 வயது சிறுவர்கள் பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 வயது சிறுமிக்கு மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 9 வயதான ஒரு சிறுவர் மற்றும் 7 வயதுள்ள 2 சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |