கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொள்ளை கிராமத்தில் கார் டிரைவர் செந்தில் நாதன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் 3 மணி முதல் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் அஸ்வினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதாவது முந்திரி தோப்பில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.