Categories
சினிமா

4 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்…. இணையத்தில் கசிந்த கிளைமேக்ஸ் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாக வெண்பாவுக்கு திருமணம் மற்றும் பாரதியின் டிஎன்ஏ முடிவு என்று எபிசோடு வந்த நிலையில் சீரியல் முடிந்து விடும் என நினைத்தனர்.

ஆனால் இந்த வாரம் எபிசோடில் ஹேமாவை வெண்பா ப்ளான் போட்டு கடத்தியுள்ளார். ஒருவேளை பாரதி டெல்லி சென்று டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கிவிட்டு வெண்பாவின் சுயரூபத்தை கண்டுபிடித்து சீரியலை முடிப்பார்கள் என்று சமீபத்தில் ப்ரோமோ வீடியோவில் நெட்டிசன்கள் கருத்து கூறி வந்த நிலையில் அது அப்படியே நடந்துள்ளதாக பாரதி கண்ணம்மாவின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

cute pair❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytv_cute_pair)

Categories

Tech |