அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 4 ஆண்டுகளில் ஈட்டிய வருவாயும் செய்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் 4 வருடங்கள் பதவி வகித்துள்ளார் அப்போது அவர் சுமார் 1.6 பில்லியன் டாலரை வருமானமாக சம்பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 மற்றும் 2020 இடையேயான காலக்கட்டத்தில் ட்ரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளில் இருந்து இந்த வருமானத்தை ஈட்டி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அவர்களே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது சம்பளம் மொத்தத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். அப்படி வழங்கி இருந்தும் கூட அவர் சம்பாதித்த வருமானம் அதிகமே.
கொரோனாவின் ருத்ர தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் அதிக இழப்பை நேர்ந்த போது, அமெரிக்காவிலும் பல நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வந்துள்ளது. அந்த சமயம் கூட ட்ரம்பின் குழுமம் மட்டும் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இதுமட்டுமின்றி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்ணர் மற்றும் அவரின் மகள் இவான்கா டிரம்ப் 2016 மற்றும் 2020 க்கு உட்பட்ட காலத்தில் 172 மில்லியன் டாலர் முதல் 640 மில்லியன் டாலர் வரை வருமானத்தை பெற்றுள்ளனர். குடிமக்களுக்கான பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் முடிவில் ட்ரம்ப் பற்றிய இத்தகவல் வெளியாகியுள்ளது.