Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

4 வருஷமா சும்மா இருந்திருக்கு…. ஊழியர்கள் அதிர்ச்சி…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் செல்போன் டவருக்கு அருகே இருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பேருந்து நிலையம் உள்ளது. இதற்கு அருகில் தனியாரிலிருந்து செல்போன் டவர் வைத்துள்ளார்கள். இது கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அதனை அகற்றுவதற்கான பணி மும்முரமாக நடந்துள்ளது.

இதனையடுத்து டவருக்கு அருகிலிருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அப்பகுதியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை ஏற்ற கோபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

Categories

Tech |