கேரளாவின் கொல்லம் அருகில் வசித்துவரும் 35 வயது பெண் ஒருவர் கடந்த 4 வருடங்களாக தன் மாமியாரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதாவது வயது முதிர்ந்த காலத்தில் அவருக்கு சரியாக உணவு கொடுக்காமல், உடல் மற்றும் கை-கால்களில் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். இதனால் மாமியார் உடல் முழுதும் சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளிவந்துள்ளது.
அதன்பின் இதுகுறித்து அறிந்த மாமியாரின் சகோதரர் உடனடியாக தனது சகோதரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது மருமகளின் செயலால் மாமியாருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. அதனை தொடர்ந்து மாமியாரின் வாக்குமூலங்களை காவல்துறையினர் பதிவுசெய்து கொண்டனர். மேலும் தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மருமகள் மனுதாக்கல் செய்துள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கிறது.