உயிரிழந்த குற்றவாளியின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் காவல்துறையினர் ராஜசேகரை சித்ரவதை செய்ததால் தான் அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இதனை அறிந்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ். பாஸ்கரன் விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில் உயிரிழந்த ராஜசேகரின் மரணம் குறித்து மாவட்ட போலீஸ் கமிஷனர் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.