Categories
இந்திய சினிமா சினிமா

4 விரல்களை காட்டும் ஜாக்கிசான்…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஜாக்கிசான் திரைப்படங்களில் காமெடி கலந்த அதிரடியான படம்தான் “ரஷ் ஹவர்”. கடந்த 1998 ஆம் வருடம் வெளியாகிய இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தது. அதன்பின் வயது மூப்பின் காரணமாக இனிமேல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்த ஜாக்கிசான், பிறகு வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒருக்கட்டத்தில் திரையுலகை விட்டு விலகுவதாகவும் ஜாக்கிசான் அறிவித்தார்.

இந்நிலையில் ரஷ் ஹவர் திரைப்படத்தின் 4வது பாகம் வெளிவர உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார். மேலும் இதற்குரிய ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாகவும் ஜாக்கிசான் கூறியிருக்கிறார். சவுதி அரேபியாவில் நடைபெறும் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றபோது ஜாக்கிசான் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். 4 ஆம் பாகம் என்பதை குறிக்கும் அடிப்படையில் அவர் 4 விரல்களை காட்டி இருக்கிறார். அப்போது அவருடன் ரஷ் ஹவர் திரைப்படத்தில் நடித்து வரும் கிரிஷ் தக்கரும் இணைந்து இதனை அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக ஜாக்கிசான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |