சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமை ஆய்வு செய்தபின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் பொருத்தவரை திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக கொரோனா வெகுவேகமாக குறையும் நிலையை அடைந்திருக்கிறோம். ஒவ்வொரு குடிசைப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு, மைக்ரோ அளவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இதனால் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா குறைந்து வருகின்றது. மற்ற மண்டலமும் விரைவில் ராயபுரம் மண்டலம் போன்ற நல்ல நிலைக்கு நிச்சயமாக வரும்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு என்று முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார். தளர்வுகள் கொடுத்து உடனே எல்லாமே செய்து விடணும் என்ற ஆர்வம் உங்களைவிட அதிகமாக இருக்கிறது. யாரையும் கட்டிப்போடணும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் இதற்கு முழு ஒத்துழைப்பு எங்கிருந்து வரவேண்டும். அரசாங்கம் தன் கடமையை செய்துள்ளது… மக்கள் தங்களுடைய கடமை செய்யணும்… மக்கள் தங்களுடைய கடமையை முழு முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே போயிட்டு வருது இந்த நான்கு விஷயம் ஒழுங்காக செய்தால் கொரோனா கண்டிப்பா ஜீரோவுக்கு வந்துரும்.
எங்க போனாலும் முககவசம் அணிய வேண்டும். சீனாவில், கேரளாவில் இரண்டாவது கட்டம் வந்துள்ளது. அதே போல மீண்டும் கொரோனா வந்தால் விளைவு மோசமாக இருக்கும். அதனால தான் அவ்வப்போது மருத்துவ குழுவின் ஆலோசனை பெற்று… அவர்களின் ஆலோசனைப்படி முதலமைச்சர் சில கட்டுப்பாடுகள் இருக்கக்கூடிய தளர்வுகள் அறிவித்துள்ளார். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். அரசு அறிவுரைகளை 100 சதவீதம் கேட்டா கண்டிப்பா மக்களை கண்காணிக்க அரசு தேவையில்லை. இது என்னுடைய உயிர் சம்பந்தப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.