Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

சூறாவளிக்காற்றில் வீடுகள் மீது மரம் விழுந்ததால் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை பல இடங்களில் மழை பெய்ததால் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் இருக்கும் புளியமரம் சூறாவளி காற்றில் சாய்ந்து அங்கிருந்த 4 வீடுகள் மீது விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த மகேந்திரன், விமலா, ரங்கம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |