கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொள்ளாச்சி சபையின் இன்ஸ்பெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்துள்ளார். மேலும் முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இதில் 180 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 168 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 90 கழிப்பிடங்கள் கட்ட அனுமதி, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக 6 பயனாளிகளுக்கு வங்கி கடன் உதவி, 3 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், கூட்டுறவு துறை மூலமாக 12 சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 50 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி உள்பட ரூ.720 பயனாளிகளுக்கு 4 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.