Categories
மாநில செய்திகள்

“4 1/2 வருடங்கள் வக்காலத்து வாங்கி பேசி விட்டேன்”… தி.மு.க-வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி….!!!!!!

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் கடந்த 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாரதி மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்து கொண்டோம்.

கடந்த 2017-ஆம் வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 2021 -ஆம் வருடம் வரை எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் எடப்பாடியின் செயல்பாட்டின் மூலமாக சீரழிந்த தமிழகத்தை இந்த 1 1/2 வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்களில் மனநிலையை புரிந்து கொண்டு நாங்கள் செயல்பட வந்திருக்கின்றோம். கடந்த நான்கரை வருடங்களாக அ.தி.மு.க-வினருக்கு வக்காலத்து வாங்கி பேசியதற்காக நான் மக்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால் தமிழகம் முழுவதும் என்று எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை நடத்தி வருகின்றார்கள்.

மேலும் மகளிக்கு இலவச பஸ் பயணத்திட்டத்தை தி.மு.க அறிவித்துள்ளது. தமிழக மின்சார துறை தன்னிறைவு பெற்ற துறையாக இருக்கிறது. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தமிழக அரசு நிறுத்திவிடும் என்னும் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். ஆனால் அந்த சூழ்நிலை எப்போதுமே வராது இன்று ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை  முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கின்றார். மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தமிழகத்தில் மத வாதத்தையும் ஜாதி கட்சியையும் வேரோடு அழிக்க வேண்டும். கோவா மாநகரம் என்றால் அது தி.மு.க-வின் கோட்டை என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி நிரூபித்து காட்டி விட்டார். அதனால் அவரோடு நாங்கள் செயல்படலாம் என்ற எண்ணத்தில்  தெளிவாக முடிவு செய்து இங்கு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |