தமிழகத்தில் கொரானா தொற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக தொடர்ந்து நான்கு வாரங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றது. தமிழகத்தில் இதுவரை 80% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 760 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் தற்போது வரை தமிழகத்தில் அரசு மூலம் 4.54 கோடி தடுப்பூசியும் தனியார் மூலம் 25 லட்சம் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 4.75 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் தமிழ்நாட்டில் 100% தடுப்பூசிகள் நிறைவு பெறும் என்று அவர் கூறியுள்ளார்.