அமெரிக்காவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் 20 மீட்டர் தூரத்தை 4.78 நொடிகளில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
உலகில் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் பல பேர் சாதனைகளை செய்கின்றனர். தங்களது உடலில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நினைத்து கவலை கொள்ளாமல் தங்களால் எது முடியுமோ அதனை சிறப்பாக செய்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில்,
அமெரிக்காவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ‘சியான் கிளார்க்’ என்ற நபர் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
இவர் 20 மீட்டர் தூரத்தை 4.78 நொடிகளில் கைகளால் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு பிறக்கும் போதே கால்கள் இல்லாத நிலையில், கைகளைக் கொண்டே நடக்கவும் ஓடவும் கற்றுக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.