ஐக்கிய அரபு அமீரக அரசு, வாரத்தின் பணி நாட்களை நான்கரை நாட்களாக குறைப்பதாக அறிவித்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில இனிமேல் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தின் இறுதி நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து மத்திய துறைகளிலும் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்திலும், காலை 7:30 மணியிலிருந்து மாலை 3:30 மணி வரை தான் பணி நேரம் என்பதும் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தான் பணி நேரம். அதாவது, உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.