போலியான கைக்கெடிகாரம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கைக்கடிகாரம் கடைகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் விற்பனையாகின்ற கடைகளுக்குச் சென்று கைக்கடிகாரம் வாங்குவது போல் பார்வையிட்டுள்ளனர். அப்போது 4 கடைகளில் போலியான கைகடிகாரம் விற்பனையாகி வந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் இம்மாவட்டத்திலுள்ள கைக்கடிகார கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இம்மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகில் துர்க்கம் சாலை மற்றும் கச்சேரி சாலைகளில் அமைந்திருக்கும் கடைகளில் இருந்த 208 போலியான கைக்கடிகாரங்கள் மற்றும் அந்த கை கடிகாரத்தில் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த 100 பைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலியான கைகடிகாரங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக சலீம், பரீத், ஜான்பாஷா, முரளிதரன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் இம்மாவட்டத்தில் சிறிது நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.