Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!..” 32 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான குழந்தைகள்…. பள்ளியில் நேர்ந்த விபரீதம்….!!

ஆஸ்திரேலியாவில் பள்ளியில் விளையாடிய போது விபத்து ஏற்பட்டு 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மேனியாவின் Devonport நகரத்தில் அமைந்துள்ள Hillcrest என்ற தொடக்கப்பள்ளியில், சிறுவர்கள், jumping castle-ல் விளையாடினர். அப்போது திடீரென்று, jumping castle காற்றில் பறந்திருக்கிறது. இதில் சுமார் 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேலும், நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயங்கர மோசமான சம்பவம், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று காவல்துறை கமாண்டர் டெபி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் பலியான சம்பவம் தன்னை  அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |