Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பயங்கரம்!”…. டிக்டாக் செயலியால் பலியான உயிர்கள்….. அபாயகரமான சவாலை மேற்கொண்ட மாணவன்…..!!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது.

அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் செய்வதை பார்க்கும் நபர்கள் அதேபோன்று செய்து வீடியோ பதிவிட தொடங்கினார்கள். அப்படி ஒவ்வொரு சேலஞ்சும் வைரலாகும். சேலஞ்ச், என்பது நடனத்தில் ஆரம்பித்து ஆபத்தான செயல்களையும் கொண்டிருக்கிறது.

இதனால் பல நாடுகள் தங்கள் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. இந்தியாவில் மத்திய அரசு, டிக் டாக் செயலிக்கு தடைவிதித்தது. எனினும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி பயன்பாட்டில் தான் இருக்கிறது. இந்நிலையில் அங்கு அபாயகரமான சேலஞ்ச் ஒன்று வைரலானது.

அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ மாகாணத்தில் ஒரு பள்ளியில், 15 வயது மாணவன், சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் காவல்துறையினர் பள்ளியில் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதாவது, டிக் டாக் செயலில், பள்ளியில் மாணவர்கள், சக மாணவர்களை துப்பாக்கியால் சுடும்  சேலஞ்ச் வைரலாகியிருக்கிறது. அதனை பார்த்த மாணவன் தான், தானும் துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. ஆனால் டிக் டாக் நிறுவனம், அது போன்ற எந்த சேலஞ்ச்-ம் பரவவில்லை என்று மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |