பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முடிந்ததும் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் வேனிற்குள் அமர்ந்து இருந்த குழந்தைகள் பதறிப்போய் தங்களை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். உடனே
வேனை நிறுத்தியுள்ள டிரைவரால் பதட்டத்தில் கதவைத் திறக்க முயன்றும் முடியவில்லை.
ஆனால், 4 மாணவர்கள் தீயில் உடல் கருகி துடி துடிக்க சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இறந்து போன நான்கு பேரும் 10 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாணவர்கள் பலியானதற்கு முதல் மந்திரி அமரிந்தர் சிங் இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சங்ரூரிலிருந்து வந்த செய்தி மிகவும் வருத்தமாக இருந்தது. பள்ளி வேன் தீ பிடித்து 4 குழந்தைகள் இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது சோகமான சம்பவம். மேலும், விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இதற்கு யார் காரணமாக இருந்தாலும் குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என பதிவிட்டுள்ளார்.
Very sad to learn of the news from Sangrur, where we lost 4 children because their school van caught fire. Injured have been rushed to the hospital. DC & SSP Sangrur are on the spot & I have ordered a magisterial enquiry. Guilty will be strictly punished.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) February 15, 2020