Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Image result for arrest

பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கிப் பிடிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் அதிர்ஷ்டவசமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for arrest

இதையடுத்து மதுரை நோக்கி காரில் தப்பிச் சென்ற நான்கு பேரும்  உசிலம்பட்டி அருகே காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை கவனித்த காவல்துறை அவர்களை மடக்கிப் பிடித்து கையில் இருந்த நான்கு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து பின் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |