Categories
தேசிய செய்திகள்

திக்.. திக்… டெல்லி தலைநகரா..? கொலை நகரா..? நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு …!!

3-ஆவது முறையாக டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 30_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக  சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த கூட்டத்தில் நுழைந்த 17 வயதான ஒருவன் துப்பாக்கியால் சுட்டான்.  இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து 2 நாட்களே ஆன நிலையில்  டெல்லியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு அரங்கேறியது மக்களை திகைப்படைய வைத்துள்ளது. டெல்லி ஜாமியா நகரில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15_ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக அமைதியான முறையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. அங்கு போராட்டத்துக்காக ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் மேடைக்கு பின்னால் சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் தடுப்புகளுக்கு அருகே இருந்த ஒரு வாலிபர் திடீரென வானத்தை நோக்கி தீடிரென துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டார்.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் போராட்டக்களம் பெரும் பரபரப்புக்குள்ளானது. அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷமும் , இந்துக்கள் மேன்மையானவர்கள் என்ற முழக்கமும் இட்டதாக சொல்லபடுகின்றது.வழக்கு பதிவு செய்ய போலீசார் அந்த நபரை விசாரித்ததில் பெயர் கபில் குஜ்ஜார் என்றும், உத்தரபிரதேச மாநிலம் தல்லுபுரா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே இன்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

ஜாமியா மில்லியா  பல்கலைக்கழகத்தின் 5ஆம் கேட் எண் அருகே நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்மநபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெல்லியில் 4 நாட்களில் 3 வது முறையாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது  நாடடையே உலுக்கியுள்ளது.

Categories

Tech |