பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் இரவு இது தொடர்பான மனுவை கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் . அந்த மனுவில் 10 நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்கள் . இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான பெண்கள் கூடி இருந்த நிலையில் இந்த வழக்கை பிற்பகல் விசாரிக்கலாம் என்று ஒத்திவைக்கப்பட்டது .
மேலும் மாலையும் ஏராளமான பெண்கள் கூடி இருந்ததால் திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிக்கல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து திருநாவுக்கரசை வீடியோ காணொளி மூலம் விசாரணை நடைபெற்றது . இந்த விசாரணையின் முடிவில் திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது . இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று மாலையே கோவை மத்திய சிறையில் இருந்து திருநாவுக்கரசை காவலில் எடுத்து இன்றிலிருந்து நான்கு நாட்கள் விசாரிக்கிறார்கள் . வருகின்ற 19ம் தேதி மாலை வரை இந்த விசாரணை நடைபெற இருக்கின்ற சூழலில் இந்த வழக்கில் புதிதாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.