Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்தது.  தற்போது தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று (நவ.12) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை  என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |