ரஷ்யாவில் பேராஷூட் வீரர்கள் பயணம் மேற்கொண்ட விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு எஞ்சின்கள் உடைய எல்-140 என்ற விமானத்தில் பேராஷூட் வீரர்கள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமான குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் சைபீரியாவில் kemerovo என்ற பகுதியின் வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 4 வீரர்கள் உயிரிழந்ததோடு, நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் விபத்தான விமானத்தை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விபத்தில் பலியானோர் மற்றும் காயம் ஏற்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் ஹெலிகாப்டர் மூலமாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.