தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகமாக மாசா அறக்கட்டளையை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகள் தங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிஉறுப்பினரான சண்முகம் காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அங்கு தங்கியுள்ள சிறுவர் -சிறுமிகளை விசாரணை செய்ததில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. சிறுமிகளை ஆதிசிவன் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கண்ணீர் மல்க சண்முகத்திடம் கூறினர்.
இதையடுத்து சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகியான ஆதிசிவனை கைது செய்தனர். மேலும் மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளை உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர், மேலும் மற்ற சிறுவர்-சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.