சீனாவில் எதிர்பாராமல் நடந்த பயங்கர சம்பவம் ஒன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள இஜோ நகரில் பாலம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பாலம் இரண்டு துண்டாக இடிந்து விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் அவ்வழியாக வந்த சுமார் 120 டன் எடையை தூக்க கூடிய ராட்சத டிரக் ஒன்று கவிழ்ந்து பின்னர் இரண்டு துண்டாக உடைந்தது.
அதனைத் தொடர்ந்து மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் 8 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.