Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலத்தில் மேய்ந்ததால்…. 4 கோழிகள் பலி…. மனு அளித்த நபர்கள்….!!

நிலத்தில் மேய்ந்த காரணத்தினால் விஷம் வைத்த்தால் 4 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் லட்சுமண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வருகின்ற கோழிகள் அடிக்கடி பக்கத்து நிலத்தில் இருக்கும் பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோழிக்கு தீவனம் வைத்து அதில் 4 கோழிகள் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இது பற்றி நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று கேட்ட போது தகராறு ஏற்பட்டு லட்சுமணன் அவரது தம்பி சின்னதுரை மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரையும் தாக்கியுள்ளனர். இதனால் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் முல்லை போன்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |