நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிக்காத அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகியவற்றோடு சேர்த்து 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு அனைத்தும் முடித்துவைக்கப்பட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அறிவித்தது. அதில் மே 19_ஆம் தேதி இந்த 4 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறு _ மென்றும் (22/04/19) நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் 4 தொகுதிகளிலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சியினர் அடுத்தகட்ட நடவடிக்கை , வேட்பாளர்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் திமுக சார்பில் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ,
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பெ. மோகன் ,
சூலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.பி.கந்தசாமி ,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எஸ். முனியாண்டி,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.வி. செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் .