Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4 மாத குழந்தை பலி…..! கேரளாவில் கொரோனா பலி 3ஆக உயர்வு …!!

 கேரளாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் முதல் முதலாக கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். சீனாவில் படிக்கச் சென்ற கேரள மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் 3 பேரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது.

இதே போல கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது. அங்கு இதுவரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 324 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலி அதிகரித்துள்ளது. கோழிக்கோடு பகுதியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 23 நாட்களுக்கு பிறகு அங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |