அமெரிக்காவைச் சேர்ந்த 4 மாத குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து அளிக்கப்பட்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல் முழுக்க முடி வளர்ந்திருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைக்கு கை கால்கள் மற்றும் இடுப்பு என்று அனைத்து இடங்களிலும் முடி வளரத்தொடங்கியுள்ளது. அதாவது, குழந்தை பிறந்த போது Congenital Hyperinsulinism என்னும் நோய் இருந்திருக்கிறது. இந்நிலையில் ஒரு நாள் திடீரென்று குழந்தைக்கு தொடர்ந்து நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த நோயின் தாக்கத்தால் குழந்தையின் உடலில் இன்சுலின் அளவு அதிகமாக சுரந்து, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே, மேட்டியோ டெக்சாஸ் என்ற மருத்துவமனையில் குழந்தைக்கு உயிர் காக்கக்கூடிய மருந்து அளிக்கப்பட்டது.
மேலும், மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். எனவே இரண்டு வாரங்கள் கழித்து குழந்தையின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், குழந்தையின் முகத்தில், திடீரென்று முடி வளர்ந்திருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல, கை, கால்கள் என்று எல்லா பகுதிகளிலும் முடி அதிகம் வளர்ந்து கொரில்லா குட்டி போன்ற தோற்றம் வந்துவிட்டது.
எனவே, குழந்தையின் பெற்றோர் மருத்துவரிடம் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா? என்று கேட்டுள்ளார்கள். அவ்வாறு செய்தால் பக்கவிளைவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் பெற்றோரும், மருத்துவர்களும் என்ன செய்வது என்று குழம்பிப் போயுள்ளனர்.