தமிழகத்தில் பெய்த கனமழையால கல்லார்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனிடையே மண் சரிவை சீர் அமைக்கப்பட்டு இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 150சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருந்திதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டார். அதன் பிறகு ரயிலை தொடர்ந்து இயக்க முடியாது என்று பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு திரும்பி கல்லாறு ரயில் நிலையத்திற்கு சென்றனர்.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் உத்தரவின்படி மீண்டும் மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது. மேலும் இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரையும் அரசுப் பேருந்துகள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் திரும்பியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நான்கு நாட்களுக்குப் பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை தொடங்கியது. மழை காரணமாக தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த மண்சரிவு சீரமைக்க பட்டதை அடுத்து மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு பிறகு இயங்க தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.