தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 472 பேர் ஆண்கள், 312 பேர் பெண்கள், 2 திருநங்கைகள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 7,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 12,653 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3,85,185 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 26 தனியார் மையங்கள் என மொத்தம் 67 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 904 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 12,673 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,178 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.