Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை மட்டும் 4 பேர் பலி….! சென்னையில் கொரோனா வெறி ஆட்டம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு வியாபாரி உட்பட 4 பேர் இன்று உயிரிழந்தனர்.

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழகத்தில் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் எதிர்பார்க்காத வகையில் பாதிப்பு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூளைமேட்டில் இருவர் பலி:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56வயது கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதில் கடந்த 6-ம் தேதி மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலையில் உயிரிழந்தார்.

அதே போல கொரோனா பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும் இன்று காலை உயிரிழந்தார்.

தாம்பரத்தில் ஒருவர்:

அதே போல கடந்த 30-ம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயது நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

ராயப்பேட்டை மூதாட்டி:

கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்ட்டு  ராயப்பேட்டையை சேர்ந்த 72 வய்து மூதாட்டி திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவரும் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று காலையில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |