Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையில் இறங்கிடுச்சு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

4 நபர்களை கொன்ற புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உள்பட 2 பகுதியில் புலி நான்கு நபர்களை கொன்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தனியார் தேயிலை எஸ்டேட்டில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட சந்திரன் என்பவரை புலி அடித்து கொன்றுள்ளது. இதனால் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகள் வைத்து இருந்திருக்கின்றனர். பின்னர் புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து மசினகுடிக்கு வந்துள்ளது. அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து புலி திரும்பவும் இடம்பெயர்ந்து ஓம்பெட்டா வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இதன் காரணத்தினால் 21 நாட்களாக வனத்துறையினர் புலியை பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம் கார்குடி பகுதியில் புலி சாலையை கடந்த நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி உள்ளனர். பின்னர் வனத்துறையினர் புலியை சுற்றி வளைத்து பிடித்து இரும்புக் கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட புலிக்கு உடலில் காயம் இருந்ததினால் சிகிச்சைக்காக மைசூரில் இருக்கும் வனவிலங்கு புத்துணர்வு மையத்திற்கு மினி லாரியில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புலி தற்போது நலமுடன் இருக்கிறது.

Categories

Tech |