கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தபோது வேறு இரண்டு நபர்கள் எம்ஜிஆர் நகரில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று நாராயணசாமி, டாக்கர் என்பவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.