மாநில நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளை அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 76-வது சீனியர் மாநில நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் நீச்சல் வீரர் விக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் போட்டியின் முடிவில் விக்காஸ் 5௦ மீட்டர் ப்ரிஸ் டையில் தங்கம், 200 மீட்டர் பட்டர் பிளேயில் தங்கம், 100 மீட்டர் பட்டர் பிளேயில் வெள்ளி, 4 பதக்கம் மற்றும் 100 மீட்டர் ப்ரிஸ் டையில் வெண்கலம் ஆகியவை வென்றுள்ளார்.
பின்னர் அசாம் மாநிலத்தில் இருக்கும் கவுகாத்தியில் நடைபெற இருக்கின்ற தேசியப் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாரதியார் பல்கலைகழகம் சார்பாக மாநில அளவிலான நீச்சல் போட்டி கோயமுத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் மதுரையை நீச்சல் வீரர் மீனாட்சிசுந்தரம் 400 மீட்டர் ப்ரிஸ் டையில் தங்கம், 200 மீட்டர் பட்டர் பிளேயில் வெள்ளி, 5 பதக்கம், தனிநபர் சாம்பியன் பட்டம் மற்றும் 50, 100, 200 மீட்டர் பேக் ஸ்டோக்கில் தங்கமும் வென்றுள்ளார்.
இதனை அடுத்து வீராங்கனை அன்னபூரணி 200 மீட்டர் பிரஸ் ஸ்டோக்கில் வெள்ளி, இரண்டு பதக்கம் மற்றும் 100 மீட்டர் பட்டர்பிளையில் வென்றுள்ளார். அதன்பின் யூத்திகா 50 மீட்டர் பிரிஸ் ஸ்டோக்கில் வெங்கலம் பெற்றுள்ளார். எனவே மாநில போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளை மாநில நீச்சல் சங்கத் துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் மற்றும் விளையாட்டு அதிகாரி ராஜா, மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளர் கண்ணன் மற்றும் பயிற்சியாளர் நாகராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர்.