பொது அமைதிக்கு பாதகமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் நான்கு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் ஜோயல் சித்தர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோயல் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக், செல்லதுரை மற்றும் செல்வகுமார் போன்றோர் இணைந்து ஒழுங்குமுறை மற்றும் பொது அமைதிக்கு பாதகமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு திட்டமிடுதலின்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.