தேனி அருகே தலைமையாசிரியர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனி செட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மூணாறு அருகே உள்ள சூரிய நல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.
இவரது தாய் சரஸ்வதி உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். நேற்றைய தினம் கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்த படி இருந்தது. இதையடுத்து பீரோவை சோதனையிட்டபோது அதில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது கண்டு பிடிக்கப்பட்டது.
பின் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை சேகரித்து வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.