டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் மோட்ச தீபம் ஏற்றி தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபட்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் கேஜரிவால் அரசும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் இந்த கலவரம் நடைபெற்றதாகவும், டிரம்ப் வருகையை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவரும் பிஸியாக இருப்பதை அறிந்து ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தமிழகத்திலும் நடைபெற்று விடக்கூடாது சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை அவர்கள் சூசகமாக கையாண்டு வருகின்றனர். இந்நிலை தொடராமல் தடுக்க வேண்டும் தமிழகத்தில் கலவரம் ஏற்படாமல் இருக்க நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.