சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.
சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது.
மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த நான்கு பெண்களில் 2 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு பிரசவம் நடந்துள்ளது. மீதம் உள்ள இருவரில் ஒருவர் 6 வார காலம், மற்றொருவர் 3 மாத கர்ப்பிணி பெண்கள் ஆவர். இவர்கள் 4 பேரும் வீடு திரும்பியதும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.