ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ள சூழலில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அசால்ட்டாக பேசியது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பா.சிதம்பரத்தின் மகனும் , நாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் இந்த நடவடிக்கை என்று கண்டித்துள்ளார்.
மேலும் , எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் பொய்யாக ஒரு வழக்கை உருவாக்கி இந்த வழக்கு சம்பவம்ங்கள் எல்லாம் 2008ஆம் ஆண்டு நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.அதற்காக 2017 ஆம் ஆண்டில் 9 வருடம் கழித்து வழக்கு போடுகிறார்கள்.என்னை 4 முறை ரைய்டு பண்ணி இருக்காங்க.இந்தியாவிலே யாரையும் 4 முறை ரைட் பண்ணினது கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் கொடுத்து இருக்கிங்க. ஒவ்வொரு சம்மனுக்கு நான் 10 மணி நேரம் அவர்கள் முன்னால் ஆஜராகியுள்ளேன். சிபிஐயின் விருந்தாளியாக 11 நாள் இருந்துள்ளேன்.